வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞனை கொரோனா அச்சத்தில் தனிமைப்படுத்திய பெற்றோர்! உயிரை விட்ட சோகம்

Report Print Raju Raju in இந்தியா

வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய இளைஞரை கொரோனா பயத்தில் பெற்றோர் தனிமைப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மரமடக்கி கிராமத்தை சேர்ந்த இளைஞன் வெளிநாட்டில் இருந்து கடந்த ஜனவரி மாதம் ஊருக்கு திரும்பினார்.

இதையடுத்து கொரோனா அச்சத்தால் அந்த இளைஞனின் பெற்றோர் அவரை தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்