என் மகன் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறான்... விவரங்கள் தேவை! பிரபல நடிகை சுஹாசினியின் பதிவு

Report Print Santhan in இந்தியா

பிரபல திரைப்பட நடிகையான சுஹாசினி தன்னுடைய மகன் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால், இணையவாசிகளிடம் உதவி ஒன்றை கேட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் அனைவரும் சுயமான தனிமைப்படுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையும், இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியுமான சுஹாசினி சில தினங்களுக்கு முன் லண்டனில் இருந்து வந்த மகன் எப்படி தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறான் என்ற வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இதற்கு சமூகவலைத்தளங்களில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து சுஹாசினி தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ளவர்களிடம் இதை நான் கேட்க விரும்புகிறேன், என் மகன் தனிமைப்படுத்ததலில் இருக்கிறான்.

இதனால், வெளிநாட்டிலிருந்து வந்த எவரையும், வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலையும் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றிய விவரங்கள் எனக்கு தேவை, இன்பாக்ஸில் அனுப்புங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கண்ட இணையவாசி ஒருவர் தங்கள் குடியிருப்பு ஒருவரில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார், அவர் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர் என்று குறிப்பிட, சுஹாசின் உடனடியாக ஒரு குறிப்பிட்ட போன் நம்பரை கொடுத்து, வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளும் படி தெரிவித்துள்ளார்.

இதே போன்று இணையவாசிகள் பலரும் சுஹாசினுக்கு பதில் அனுப்பி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்