மாலையும் கழுத்துமாக ஊர்வலம் வந்த மணமகனை கைது செய்து தூக்கிச்சென்ற பொலிஸ்!

Report Print Vijay Amburore in இந்தியா

கொரோனா வைரஸ் தாக்குதலினால் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டை மீறி திருமண ஊர்வலம் சென்ற மணமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொரோனா வைரஸாலானது உலகெங்கிலும் பேரழிவினை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 21 நாட்களுக்கு நாடு தழுவிய முடக்கத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் அதனை மீறி உத்தரகண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில், திருமண ஊர்வலம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மாலையும் கழுத்துமாக ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த மணமகன் மற்றும் மேளதாளங்கள் வாசித்த 7பேர் என மொத்தமாக 8 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 188 ஐ மீறியதற்காக மணமகன் மற்றும் 'மேளதாளம் வாசிப்பவர்கள்' மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது (அரசு ஊழியரால் முறையாக அறிவிக்க உத்தரவிடாதது). அவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்