14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பி சென்ற IAS அதிகாரி

Report Print Vijay Amburore in இந்தியா

14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பி சென்ற மாவட்ட துணை ஆட்சியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணிபுரிந்து வரும் அனுபம் மிஸ்ரா தனது விடுமுறையின் போது சிங்கப்பூருக்கு சென்றுவிட்டு இந்தியாவிற்கு திரும்பியுள்ளார்.

மார்ச் 19ம் திகதியன்று பணிக்கு திரும்பிய அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள், 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் அடுத்த சில தினங்களில் அவருடைய அறை காலியாக இருந்துள்ளது. போன் செய்து பார்த்தபோது, பெங்களூரில் உறவினரின் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் அங்கு சென்ற அதிகாரிகள் அவர் உத்திரபிரதேசத்தில் அவருடைய வீட்டில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அப்துல் நசீரின் விசாரணை அறிக்கை தயார் செய்து மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளார். அதில், “இது பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு அதிகாரியின் பெரும் குறைபாடு” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் துணை ஆட்சியர் அனுபம் மிஸ்ரா, வீட்டிற்குத் திரும்புவதற்கான அனுமதியாக வீட்டுத் தனிமைப்படுத்தலை தவறாகப் புரிந்துகொண்டதாக விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத மாநில அரசு அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்