நாம் கொரோனாவின் Stage 3-யில் இருக்கிறோம்... இது தீவிரமடையும்! எச்சரிக்கும் ஒருங்கிணைப்பாளர்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மூன்றாம் கட்டத்தை எட்டிவிட்டது என்று கொரோனாவிற்கு எதிரான பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் கிரிதர் ஞானி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் வேகம் எடுத்துள்ளது, வரும் நாட்களில் இதன் தீவிரம் இன்னும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவியுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 906 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதிகமாக கேரளாவில் 176 பேருக்கும் மகாராஷ்டிராவில் 162 பேருக்கும் கொரோனா ஏற்பட்டு உள்ளது. மொத்தம் 21 பேர் இந்த நோயால் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான செயல்பாட்டில் முக்கியமான பங்கு வகிக்கும் மருத்துவர் கிரிதர் ஞானி நாட்டில் கொரோனா பாதிப்பின் மூன்றாம் கட்டம்(Stage 3) பரவல் தொடங்கிவிட்டது என்று கூறியுள்ளார்.

தி க்யுண்ட் செய்தி நிறுவனத்திரு இவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மூன்றாம் பரவல் தொடங்கிவிட்டது.

இதை அரசு Stage 3 என்று அழைக்கவில்லை என்றாலும் கூட, நாம் Stage 3-க்குள் நுழைவந்துவிட்டோம் என்பதுதான் உண்மை. வரும் நாட்களில் இந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டவர்கள் அதிகம் வரலாம். நமக்கு போதிய நேரம் இல்லை. நம்மிடம் போதுமான பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இதற்காக இல்லை.

அடுத்த 5 நாட்கள் அல்லது 10 நாட்களில் இந்தியாவில் நிறைய பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இப்போது அறிகுறி இல்லாத நபர்களுக்கு வரும் நாட்களில் அறிகுறி தென்பட வாய்ப்புள்ளது.

இதனால் திடீர் என்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு இப்போதும் கூட இருமல், மூச்சு அடைப்பு, காய்ச்சல் உள்ளவர்களை மட்டும்தான் சோதனை செய்கிறது. இதை மாற்ற வேண்டும்.

இந்த அறிகுறிகள் இல்லையென்றால் அவர்களுக்கு சோதனைகள் செய்யப்படுவது இல்லை. இதை மாற்ற வேண்டும். அதிக அளவில் சோதனைகளை செய்ய வேண்டும். சோதனைகளை அதிக அளவில் செய்து, மக்களை தனிமைப்படுத்த வேண்டும்.

இதுதான் இப்போது முக்கியம்.

அதேபோல் கொரோனாவிற்கு எதிராக மருத்துவமனைகளை தயார் செய்ய வேண்டும். 3 கோடி பேர் இருக்கும் இடத்தில் குறைந்தது 3 ஆயிரம் பெட்களை தயார் செய்ய வேண்டும்.

முதலில் இதற்காக மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் எல்லோரையும் பயிற்சி அளிக்க வேண்டும். அதேபோல் சில மருத்துவ கல்லூரிகளின் விடுதிகளை காலி செய்துவிட்டு, அதை மருத்துவமனைகளாக மாற்ற வேண்டும்.

இதற்காக மருத்துவ கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களையும் தயார் செய்ய வேண்டும். அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணம் அடைந்தவர்கள், அறிகுறி உள்ளவர்கள் எல்லோரையும் தனி தனியாக வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் மொத்தம் உலகநாடுகளால் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.

Stage 1

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஒருவர் கொரோனா பாதிப்போடு வருவது.

Stage 2

கொரோனாவோடு வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர், தனது வீட்டில் இருக்கும் உறவினர்களுக்கு வைரஸை பரப்புவது. இதை லோக்கல் டிரான்ஸ்மிஷன் என்று அழைப்பர்.

Stage 3

வெளிநாட்டு நபர் மூலம் அவரின் ஊரில் இருக்கும் நபர்கள், அப்படியே வெளி ஊரில் இருக்கும் நபர்கள் என்று வரிசையாக பலருக்கு கொரோனா பரவுவது. இது கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன் என்று அழைப்பர்.

Stage 4

இந்த கம்யுனிட்டி டிரான்மிஷன் பலருக்கு பரவி, யாருக்கு முதலில் தோன்றியது, எப்படி பரவியது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பல ஆயிரம் பேருக்கு பரவுவது. இது pandemic டிரான்ஸ்மிஷன் என்று அழைப்பர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்