நிறைமாத வயிற்றுடன் கொரோனா சோதனை கருவியை தயாரித்த பெண்: அடுத்த சில மணி நேரங்களில் பிறந்த குழந்தை

Report Print Vijay Amburore in இந்தியா

நிறைமாத கர்ப்பிணி வயிற்றுடன் இந்தியாவிற்கான முதல் கொரோனா பரிசோதனை கருவியை தயார் செய்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்த வருகின்றன.

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மக்களை சோதிப்பதற்கு போதுமான கருவிகள் இல்லை என இந்தியா கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் புனேவில் உள்ள மைலாப் டிஸ்கவரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவரான மினல் தகாவே போசலே என்பவர் நிறைமாத கர்ப்பிணி வயிற்றுடன் இந்தியாவிற்கான முதல் கொரோனா பரிசோதனை கருவியை உருவாக்கினார்.

வியாழக்கிழமையன்று சந்தைக்கு வந்த இந்த கருவி, கோவிட் -19 நோய்த்தொற்றை உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ, காய்ச்சல் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்வதில் அதிகரிப்பு இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம் கொரோனா சோதனை கருவிகளை தயாரிக்கவும் விற்கவும் முழு ஒப்புதல் பெற்ற முதல் இந்திய நிறுவனமான Mylab Discovery, இந்த வாரம் புனே, மும்பை, டெல்லி, கோவா மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள ஆய்வகங்களுக்கு 150 அடுக்குகளை அனுப்பியுள்ளது.

வாரத்திற்கு 100,000 கோவிட் -19 சோதனைக் கருவிகளை வழங்க முடியும் என்றும் தேவைப்பட்டால் 200,000 வரை உற்பத்தி செய்ய முடியும் என்றும் நிறுவனம் கூறுகிறது.

இந்த கருவியின் மூலம் 100 மாதிரிகளை சோதிக்க முடியும் மற்றும் இதன் விலை 1,200 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டிலிருந்து கோவிட் -19 சோதனை கருவிகளை இறக்குமதி செய்ய இந்தியா செலுத்தும் 4,500 ரூபாயில் கால் பகுதி ஆகும்.

இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் சோதனை முடிவுகளை கொடுக்க 6 முதல் 7 மணி வரை எடுத்துக்கொள்ளும் நிலையில், தங்களுடைய தயாரிப்பில் உருவான கருவிகள் இரண்டரை மணி நேரத்தில் முடிவை கொடுப்பதாக போசலே கூறியுள்ளார்.

கடன் மார்ச் 18ம் திகதியன்று இந்த கருவியை தேசிய வைராலஜி நிறுவனத்தின் மதிப்பீட்டிற்காக சமர்ப்பித்த அடுத்த சில மணி நேரங்களிலே பிரசவ வலியால் போசலே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலானது தற்போது இணையத்தில் வெளியானதை அடுத்து, அவருக்கு இந்திய பிரபலங்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்