உடலை தூக்கி செல்ல யாரும் வரவில்லை! கலங்கி நின்ற மகன்: இஸ்லாமியர்களின் பெரும் உதவி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் உயிரிழந்த நபரின் உடலை தூக்கி செல்வதற்கு உறவினர்கள் யாரும் வராத நிலையில், இஸ்லாமியர்கள் சிலர் ஒன்று சேர்ந்து அவரின் உடலை தூக்கி சென்ற வீடியோ காட்சி வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவி பிறக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியில் ஒன்று கூடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்திரப்பிரேத மாநிலத்தின் Bulandshahr-ல் கொரோனா வைரஸ் பயம் காரணமாக ரவிசங்கர் என்பவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ரவிசங்கரின் மகன் தெரிவித்துள்ளார். இருப்பினும் யாரும் வராத காரணத்தினால், அவரின் உடலை கூட எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள், அதுமட்டுமின்றி மாநிலத்தில் மக்கள் கூட்டம் சேரக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், யாரும் வரவில்லை. இவர்கள் இருக்கும் Anand Vihar பகுதி இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதி என்று கூறப்படுகிறது.

இந்த நிலையை அறிந்த அங்கிருந்த இஸ்லாமியர்கள் சிலர் ரவிசங்கரின் வீட்டிற்கு சென்று, மகனுக்கு ஆறுதல் கூறியதுடன், அவரது உடலை தூக்கி சென்றுள்ளனர். அப்போது அவர்கள் இந்து கடவுளான ரமரின் பெயரை கூறியபடி சென்றுள்ளனர்.

தகனம் செய்யப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின், அங்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவிட்டு, ரவிசங்கரின் மகனை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டே சென்றுள்ளனர், இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்