தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் இருவர் குணமடைந்து வீடு திரும்பினர்..! சுகாதார அமைச்சர் தகவல்

Report Print Basu in இந்தியா

தமிழத்தில் கொரோனா நோயாளிகள் இருவர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய போரூரைச் சேர்ந்த கொரோனா நோயாளிகள் இருவர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர் என சுகாதாரத்துறை அமைச்சர் வி.விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்து மீண்டனர் மற்றும் இரண்டு முறை நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியானது.

அடுத்த 14 நாட்களுக்கு அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். நோயாளிகளை கவனித்துக்கொண்ட மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவ குழுவை நான் பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1,763 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 42 பேருக்கு கொரோனா உறுதியானது அதில் இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்