கொரோனா பரவலை தடுக்க இலங்கை தமிழர்கள் செய்யும் செயல்! ஆச்சரியப்படும் மக்கள்... புகைப்படத்துடன் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதை கடைப்பிடிப்பதில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இலங்கை தமிழர்கள் திகழ்கின்றனர்.

144 தடை உத்தரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே யாரும் வரக்கூடாது என அறிவிறுத்தியுள்ளது.

அதனையும் மீறி 10 சதவித மக்கள் குறிப்பாக இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து ஊர் சுற்றிக்கொண்டு உள்ளனர்.

இதற்கிடையில் தமிழகத்தின் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இலங்கை முகாமில் வாழும் மக்களை பார்த்து ஆச்சயப்பட்டு போகிறார்கள் அப்பகுதி மக்கள். இங்குள்ள வீடுகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததும் இலங்கை முகாமை சேர்ந்தவர்கள், தங்களது வீடுகளில் வீட்டுக்கு ஒரு பாலிஸ்டர் புடவையை வாங்கி அதை இணைத்து 300 மீட்டர் தூரத்துக்கு தங்களது குடியிருப்பை வெளியாள் பார்வையில் இருந்து மறைத்துள்ளனர்.`

உள்ளேயுள்ள குடியிருப்பில் இருந்து வெளியே வரவும், வெளியில் இருந்து உள்ளே வரவும் ஒரு வழியை மட்டும் வைத்துள்ளனர். அந்த வழியையும் அடைத்து வைத்துள்ளனர்.

அனுமதியில்லாமல் யாரும் உள்ளே வரவும், வெளியே செல்லாதபடி கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். அந்த நுழைவாயிலில் இது 144 மற்றும் ஊரடங்கு உத்தரவால் இந்த ஏற்பாடு என நோட்டீஸ் ஒட்டிவைத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், இலங்கையில் இதுப்போல் பல ஊரடங்கு, 144 தடை உத்தரவுகளை பார்த்தவர்கள் நாங்கள். பிறரிடம் இருந்து நாங்கள் அங்கே விலகியிருக்க இந்த வழியைத்தான் பயன்படுத்துவோம். அதையே தான் இங்கும் செயல்படுத்தியுள்ளோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்