கொரோனா உள்ளதா என்பதை உடனே கண்டுபிடிக்கலாம்! விளம்பரத்தை நம்பி லட்சத்தில் பணத்தை இழந்த நபர்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் அருகில் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை செல்போன் செயலி மூலம் கண்டுபிடிக்கலாம் என கூறப்பட்ட விளம்பரத்தை நம்பிய நபர் பெரியளவில் பணத்தை இழந்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் Goregaon East பகுதியை சேர்ந்தவர் அபிஜித் கவாலி (46).

இவர் தனது செல்போனில் ஒரு செயலியை பார்த்துள்ளார், அதில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால் உங்கள் அருகில் கொரோனா பாதிப்பு கொண்டவர்கள் இருந்தால் அது போன் vibrate ஆவதன் மூலம் கண்டுபிடித்துவிடலாம், இதன் மூலம் நீங்கள் உஷாராகி கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இதை நம்பிய அபிஜித் அந்த செயலியை பதிவிறக்கம் செய்தார். பின்னர் அவருக்கு ஒரு OTP எண் வந்த நிலையில் அதை செலுத்தினார்.

இதையடுத்து அபிஜித் வங்கிக்கணக்கில் அவருக்கு சம்பளம் செலுத்தப்பட்டதற்கான மெசேஜ் வந்தது, ஆனால் திடீரென அவரின் மொத்த பணமும் (ரூ 1.06) பணமும் திடீரென பறிபோனது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார்.

பின்னர் இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்தார், பொலிசார் வங்கி உதவியுடன் செயலியை வைத்து பணத்தை பறித்த நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்