ஊரடங்கு உத்தரவு! சிறுநீரக வலியால் அவதிப்பட்ட இலங்கை தமிழருக்கு கிடைத்த உதவி... நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா
459Shares

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கால் சிறுநீரக பிரச்சனைக்கு சிகிச்சை பெற முடியாமல் வலியால் அவதிப்பட்ட இலங்கை தமிழருக்கு பொலிசார் தங்க சமயத்தில் உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறச்சியின் அரச்சலூரில் இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இங்கு வசிப்பவர் நெல்சன், (47).

நெல்சன் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கால் ஊர் ஸ்தம்பித்திருக்கும் நிலையில், 10 நாட்களாக அவரால் வெளியில் சென்று சிகிச்சை பெற முடியவில்லை.

இதன் காரணமாக நேற்று மதியம், கடும் வயிற்றுவலி மற்றும் சிறுநீரக நோயால் நெல்சன் அவதிக்கு ஆளானார். இதை பார்த்து வேதனடையடைந்த அவரின் உறவினர்கள் அரச்சலூர் காவல் நிலையத்துக்கு சென்று முறையிட்டு, அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்த பொலிசார் நெல்சனை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதோடு பாதுகாப்பு மற்றும் உதவிக்காக அரச்சலூர் எஸ்.ஐ ஆறுமுகம் அந்த வாகனத்திலேயே சென்றார்.

இந்நிலையில் தக்க நேரத்தில் நெல்சனின் நிலையை உணர்ந்து உதவி செய்த அரச்சலூர் பொலிசாருக்கு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்