தன்னை செல்லமாக வளர்த்த பாட்டிக்கு வீடியோ அழைப்பில் இறுதிச்சடங்கு செய்த பேரன்! மனதை உருக்கிய சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தன்னை செல்லமாக வளர்த்த பாட்டியின் இறுதிச்சடங்கில் நேரில் பங்கேற்க முடியாத பேரன் வீடியோ அழைப்பில் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் மனதை உருக்கியுள்ளது.

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த 103 வயதான சிவனம்மாள் என்ற மூதாட்டி மதுரை விளாங்குடியிலுள்ள தனது மகனின் வீட்டில் வசித்து வந்தார்.

மறைந்த அவரது மற்றொரு மகனின் மகனான உதவி இயக்குநர் கார்த்திக் என்பவரை சிறுவயதில் இருந்தே வளர்த்துள்ளார்.

தற்போது கார்த்திக் சென்னையில் பணியாற்றி வரும் நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட சிவனம்மாள் உயிரிழந்தார்.

ஊரடங்கு காரணமாக சென்னையில் முடங்கியுள்ள அவரது பேரன் கார்த்திக் தான் அவரது தந்தை ஸ்தானத்தில் இருந்து மூத்த பேரன் செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய வேண்டியது முறை.

ஆனால் அவர் பங்கேற்க முடியாத காரணத்தால் காணொளி மூலமாக இறுதிச் சடங்குகளை செய்தார். மதுரையிலும் ஊரடங்கு பின்பற்றப்படுவதால் இறந்தவருக்கு மாலை வாங்குவதற்கு 3 மணி நேரம் அலைந்து திரிந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இதோடு கொரோனா பீதி காரணமாக குடும்பத்தார் மட்டுமே பங்கேற்று 3 மணி நேரத்தில் மூதாட்டியின் சடலத்தை எரியூட்டி அவரது இறுதி பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்