கொரோனாவிலிருந்து ஊர் மக்களை காப்பாற்றணும்!... வயல்வெளிகளில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்கள்

Report Print Fathima Fathima in இந்தியா

இந்தியாவில் வேலை நிமித்தமாக ஓடிசாவிலிருந்து கேரளாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியும் வயல்வெளிகளில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா வைரசின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பணி நிமித்தமாக சொந்த ஊரை விட்டு வந்த மக்கள் மீண்டும் ஊர் திரும்புகின்றனர்.

பல நூற்றுக்கணக்கான கி.மீ பெண்களும், குழந்தைகளும் நடந்தே வரும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஒடிசாவின் பிப்லகுடா கிராமத்தை சேர்ந்த 12 பேர் கேரளாவுக்கு வேலைக்கு சென்றுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் பல நாட்கள் சிரமத்துடன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

எனினும் அவர்கள் வீடுகளுக்கு செல்லாமல் ஊருக்கு வெளியே வயல்வெளிகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

தங்களால் குடும்ப உறுப்பினர்களுக்கு, ஊர் மக்களுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூாது என்பதற்காக இவ்வாறு செய்துள்ளனராம்.

இந்நிலையில் இவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு நோய் தொற்று இல்லை என தெரியவந்தாலும், உத்தரவு முடியும் வரை அங்கே வசிக்கப்போவதாகவும் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்