விற்பனையாளர்களை தாக்கி, நடுரோட்டில் வண்டிகளை காய்கறிகளுடன் கவிழ்த்து பொலிஸ் அட்டுழியம்! சிக்கிய வீடியோ

Report Print Basu in இந்தியா
793Shares

இந்தியாவில் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அகமதாபாத்தில் விற்பனையாளர்களிடம் பொலிஸ் காட்டுமிராண்டி தனமாக நடந்துக்கொண்ட வீடியோ வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவிற்கு 32 பேர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் திகதி வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார்.

எனினும், மக்களுக்கு காய்கறி, பால், மருந்து உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அகமதாபாத்தின் கிருஷ்ணநகரில் காய்கறி விற்பனையாளர்களிடம் காட்டுமிராண்டி தனமாக நடந்துக்கொண்டது வீடியோவாக வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோவில், தள்ளு வண்டியில் காய்கறி விற்பனை செய்ய கொண்டு சென்ற நபர்களை வழிமறித்து லத்தியால் அடித்த பொலிசார், நடுரோட்டில் வண்டியை கவிழ்த்து காய்கறிகளை கொட்டினர்.

இச்சம்பவத்தை அப்பகுதியிலிருந்த நபர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் பிறரை அகமதாபாத் பொலிஸ் கமிஷனர் இடைநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்