அச்சுறுத்தும் கொரோனா: இனிமேல் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்! - உணர்த்தும் மற்ற நாடுகள்

Report Print Abisha in இந்தியா

இந்தியாவில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இனி அந்நாடு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது மற்ற நாடுகள்.

அமெரிக்காவை போல் தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் இரண்டு வாரங்களுக்கு பின்தான் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியது. அதே போல் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் 785,777பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் 1347 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 138பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். 1165பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதுவரை 44பேர் பலியாகியுள்ளனர். அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் இந்தியாவில் 227 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. இந்தியாவில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறை.

நேற்று டெல்லியில் மட்டும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 1024 பேருக்குத்தான் இந்தியாவில் கொரோனா இருந்தது. அதன்பின் இது வேகம் எடுத்துள்ளது.

இந்தியாவில் முதல் 200 நோயாளிகளுக்கு கொரோனா ஏற்பட மிக அதிக நாட்கள் எடுத்தது. பெப்ரவரி 15ம் திகதி இந்தியாவில் முதல் நபருக்கு கேரளாவில் கொரோனா ஏற்பட்டது. அதன்பின் மார்ச் 20ம் திகதிதான் 200வது நபருக்கு கொரோனா ஏற்பட்டது. அதாவது 200 பேருக்கு கொரோனா ஏற்பட 35 நாட்கள் ஆனது. ஆனால் திடீர் என்று வேகம் எடுத்து இருக்கும் கொரோனா, நேற்று ஒரே நாளில் மட்டும் 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 15ல் இருந்து இந்தியா ஆயிரம் நோயாளிகளை தொட எடுத்துக் கொண்ட காலம் சரியாக 45 நாட்கள். மார்ச் 29ம் திகதி தான் இந்தியா ஆயிரம் நோயாளிகளை தொட்டது.

மற்ற உலக உலக நாடுகளை விட இது மெதுவானது என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் உலகம் முழுக்க இதே நிலைதான். முதலில் கொரோனா வைரஸ் மிகவும் மெதுவாக பரவும், அதன்பின் திடீர் என்று வேகம் எடுத்து, வரிசையாக பலரை தாக்கும். கொத்து கொத்தாக பலர் மருத்துவமனையில் சேர்வார்கள்.

அதேபோல் தான் அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா ஏற்பட்டது பெப்ரவரி 15. மார்ச் 15ம் திகதி சரியாக ஒரு மாதத்தில் அங்கு ஆயிரம் பேருக்கு கொரோனா வந்தது.

அதன்பின் வேகம் எடுத்த தொற்று கொத்து கொத்தாக மக்களை மருத்துவமனைகளில் சேர வைத்தது.

அதில், 20ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதில் இருந்து 85 ஆயிரத்தை தொட எடுத்துக் கொண்ட நாட்கள் வெறும் 6 நாட்கள்தான். சரியாக ஒரு மாதம் கழித்து அங்கு கொரோனா வேகம் எடுத்தது.

இதுபோன்றுதான் இத்தலியிலும் நிகழ்ந்தது.

கொரோனா என்பது ஒருவர் மூலம் இன்னொருவருக்கு தொடுதல் மூலம் பரவ கூடியது. அதேபோல் இந்த வைரஸ் அறிகுறி இல்லாமலே பரவ கூடியது. இதுதான் இந்த வைரஸ் தாக்குதல் குறிப்பிட்ட காலத்தில் வேகம் எடுக்க காரணம். உதாரணமாக A என்ற நபருக்கு கொரோனா வைரஸ் இருந்தும் அறிகுறி இல்லை. அவர் பல இடங்களுக்கு செல்கிறார். பலரை சந்திக்கிறார். அவருக்கு தெரியாமல் அவர் பலருக்கு கொரோனாவை பரப்புவார்.

இவர் மூலம் ஒரே நாளில் பலருக்கு கொரோனா ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதான் ஒரே நாளில் வேகமாக உயர காரணம் ஆகும். எனவே இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இதுதான் என்பதை மற்ற நாடுகள் உணர்த்துகின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்