இந்தியாவில் வெறுப்புணர்வை சம்பாதிக்கும் சீனா! அரசை தாண்டி சீனர்களை தாக்கும் ஊடகங்கள்: கொரோனா அச்சத்தால்...

Report Print Abisha in இந்தியா

கொரோனா வைரஸிடம் சிக்கியுள்ள இந்தியாவில், சீனா மீதான வெறுப்புணர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரிக்கு கொண்டே செல்கிறது. உலக நாடுகள் இதற்காக பல கட்ட ஆய்வுகள் மேற்கொண்டு செய்து வருகின்றனர்.

கடும் போராட்டத்தில் சிக்கியுள்ள நாடுகள் அனைத்தும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. மக்கள் அவசர தேவைக்கு மட்டும் வெளியில் சென்று வருகின்றன.

இந்நிலையில், சீனாவில் முதலில் பரவிய கொரோனா வைரஸால் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் சீனா மீது கடும் குற்றச்சாட்டு முன் வைத்து வருகின்றன. முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா வைரஸ் என்று கடுமையாக பலமுறை சாடியிருந்தார்.

இந்திய அரசு சீனா மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கவில்லை.

ஆனால், ஊடகங்களில் சீனாவுக்கு எதிரான உரையாடல் இந்தியாவில் வளர்ந்து வருகிறது.

சீனா இந்த கொரோனா வைரஸ் சிக்கலை சமாளித்த விதம் குறித்துக் குற்றஞ்சாட்டி இந்தியர்கள் பலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சமீப காலம் வரை டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில், சீனாவிற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றன.

ஆரம்பத்தில் செய்தி நிறுவனங்கள்

முன்னதாக கொரோனா வைரஸ் பரவல் சீனாவில் தொடங்கியபோது இந்திய முன்னணி ஊடகங்கள் அது குறித்து செய்தி வெளியிட்டவிதம் பெரும்பாலும் கட்டுப்பாட்டோடும், சீன அரசாங்கம் குறித்து நடுநிலைத் தன்மையோடும் இருந்ததாகவே வெளிப்படுத்தியிருந்தது. சில இந்தி சேனல்கள் மட்டும் விதிவிலக்காக கோவிட் 19 வைரஸ் என்பது சீனாவால் உருவாக்கப்பட்டது என்று உறுதிபடுத்தப்படாத தகவலை வெளியிட்டன.

தொடர்ந்து சீனாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கிய இடத்தில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்படுவது குறித்து முன்னணி செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டு வந்தனர்.

21நாட்கள் முடக்கம் அறிவிப்பிற்கு பின்

இந்தியாவில் 21 நாட்கள் பொது நடமாட்ட முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நம்பகமான ஊடக நிறுவனங்களும், வல்லுநர்களும் விவாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. நடந்துவரும் சிக்கலுக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை விவாதிப்பதற்காகச் சீனாவோடு தொடர்ந்து இந்திய அரசு தொடர்பில் இருக்கும் நிலையில் செல்வாக்கு மிக்க இந்திய ஊடகங்கள் இந்த வைரஸ் பரவலுக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று கோருகின்றன.

அமைச்சர்கள் பேச்சு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ உடன் ஒரு தொலைபேசியில் உரையாடல் மேற்கொண்டதாகவும் அதில் கொரோனா வைரஸை ஒரு 'சீன வைரஸ்' என்று இந்தியா முத்திரை குத்தாது என்று அவர் ஒப்புக் கொண்டதாகவும் இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் மார்ச் 24ம் திகதி வெளியிட்ட ட்விட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்திருந்தார்.

ஆனால், கொரோனா வைரஸ் சீனாவில் உருவாக்கப்பட்டது என்பது முதல், சீனா இந்த தொற்றை தவறாக கையாண்டு உள்ளது என்பது வரை பல குற்றச்சாட்டுகள் பல முன்னணி செய்தி நிறுவனங்கள் வெளிபடுத்தி வருகின்றன.

சீனாவே இந்த வைரஸை உருவாக்கி உலகம் முழுவதும் பரப்பியது என்ற குற்றச்சாட்டினை Chinese virus, Chinese virus-19 ஆகிய ஹேஷ் டேக்குகளை பயன்படுத்தி ட்விட்டரில் இந்தியர்கள் பலர் பரவலாக எழுப்பி வருகின்றனர்.

மார்ச் 25-ஆம் திகதி இந்திய அளவிலான முடக்கம் தொடங்கியதிலிருந்து இது நடக்கிறது.

புறக்கணிக்க கடினமான உண்மை

சீனா உயிரி ஆயுதம் ஒன்றைப் பரிசோதித்ததன் விளைவே கொரோனா வைரஸ் என்று நிரூபிப்பது கடினம். ஆனால் கொரோனா வைரஸ் முதல் முதலில் பரவத் தொடங்கிய வுஹான் நகரில்தான் வைரஸ் ஆய்வுக்கான மிகப்பெரிய ஆய்வகம் இருக்கிறது என்கிற உண்மையையும் புறக்கணிப்பது கடினம் என்றும், அந்த ஆய்வகத்தை சீனாவின் அரசு ஊடகங்கள் பெருமையாக கூறி வந்துள்ளன என்றும் பிரபல இந்தி நாளேடான தைனிக் ஜாக்ரனில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது.

லாபம் சம்பாதிக்க சீனாவின் திட்டம்!

சீனாவே இந்த வைரசை உருவாக்கியது என்றும் இப்போது அதற்கான மருந்துகளையும், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் லாபம் சம்பாதிப்பதாகவும், பிரபல ஆங்கில செய்தி சேனலான இந்தியா டுடேவில் தொகுப்பாளராகப் பணியாற்றும் ஷிவ் ஆரூர் குற்றம்சாட்டினார்.

சீனா ஒரு நம்ப முடியாத, நயவஞ்சகமான நாடு என்றும் அது தற்போது உலகத்துக்கு ஒரு அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்ட அவர் அது முதலில் சிக்கலை உருவாக்கிவிட்டு அதை தீர்ப்பதற்கான உலகின் முயற்சிகளிலிருந்து லாபம் சம்பாதிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

உலக சுகாதார அமைப்பு மீது குற்றச்சாட்டு

இந்திய அரசோ, ஆளும் பாரதிய ஜனதா கட்சியோ கொரோனா வைரஸ் சிக்கலுக்குச் சீனாவைக் குற்றம்சாட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், பாஜகவின் கொள்கைக் கூட்டாளியான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பு, சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் கூட்டு சேர்ந்து இந்த சிக்கல் மோசமடைவதை அனுமதித்ததாகக் குற்றம்சாட்டியது.

பொருளாதார விவகாரங்களில் அவ்வப்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆலோசனை கேட்கும் அமைப்பான இந்த சுதேசி ஜாக்ரன் மஞ்ச், கொரோனா வைரசின் பெயரை 'சீன வைரஸ்' என்று பெயர் மாற்றவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தை வலியுறுத்தியது.

இவ்வாறு பல விமர்சனங்கள் இந்தியர்கள் மத்தியில் உள்ளது. இதனால், பல இடங்களில் சீனர்கள் மீது இந்தியர்கள் தாக்குதலும் நடத்தியுள்ளனர் என்பதை நாம் ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடிந்தது.

குறித்த அந்த செய்தியில் சீனர் போன்ற முகம் கொண்ட பெண் தாக்கப்பட்டத்தை பார்த்திருந்தோம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்