வாழ்க்கையில் ஒரு கி.மீ சேர்ந்து நடந்ததில்லை! இப்போ 320 கி.மீ நடக்கிறோம்: கொரோனாவால் முடக்கப்பட்ட இந்தியாவின் நிலை

Report Print Abisha in இந்தியா

இந்தியாவில், போக்குவரத்து முடக்கத்தால் மக்கள் நடந்து சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்தியாவில், கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் வரும் 14ஆம் திகதி முடக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டாலும் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டதால் அது இயலவில்லை.

இந்நிலையில், இந்தியாவின் வட மாநிலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்று வருகின்றனர்.

பல கிலோமீட்டர் நடந்து செல்லும் அவர்களுக்க வழி நெடுக்க உணவுகள் தண்ணீர்கள் என்று பல தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் பல்லடத்தில்(திருப்பூர் மாவட்டம்) இருந்து சிதம்பரத்திற்கு ஒரு தம்பதியினர் நடபயணம் துவங்கியுள்ளனர். அவர்கள், சாப்பாடு தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை கட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு நடக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், எங்களுக்கு திருமணமாகி இரண்டு பசங்க இருக்காங்க. எங்களுக்கு சொந்த ஊர் சிதம்பரம்(கடலூர் மாவட்டம்). எங்க அம்மா, அப்பா எல்லாரும் சிதம்பரத்தில் உள்ளனர். நாடே முடக்கப்பட்டதால் செலவை சம்மாளிக்க முடியவில்லை. சாப்பாட்டுக்கும் சிரமமாக உள்ளது. அதோடு குடும்ப ஞாபகம் வந்திடிச்சு பிள்ளைகளைப் போய்ப் பார்க்கணும். அதனால கணவருடன் 320 கிலோ மீற்றர் நடந்து செல்கிறோம்.

பல்லடம் காவல்நிலையத்தில் பேசினோம். அவங்க எங்களைப் போக அனுமதித்துக் கடிதம் கொடுத்தாங்க. காலையில் 9 மணிக்குப் பல்லடத்தில் கிளம்பினோம்

மின்வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் எங்களுக்கு மாஸ்க் கொடுத்தாங்க. அவ்வபோது, சில கிலோமீட்டர்கள் வரை பயணிக்க லாரி உதவி கிடைச்சுச்சு. அங்கங்கே மரநிழலில் உட்கார்ந்து, புளியோதரையைச் சாப்பிட்டுக்குவோம். தண்ணியும் தேவையான அளவு கொண்டு வந்துருக்கோம். வாழ்க்கையில் ஒருகிலோமீட்டர் கூட சேர்ந்தாப்புல இதுவரை நடந்ததில்லை. ஆனா, இப்போ 320 கிலோமீட்டர் தூரத்தை இந்தக் கொரோனா பாதிப்புனால நானும் என்னோட கணவரும் நடந்தே கடக்கப்போறோம். எப்படியாவது குடும்பத்தைப் போய்ப் பார்க்கணும்ங்கிற ஆர்வத்துல, நடக்குறது எங்களுக்குக் கஷ்டமாவே தெரியலை" என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இந்திய அரசு போக்குவரத்து முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் மக்களை அவதிபட வைக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மக்கள் பலர் பணி செய்யும் இடங்களில் உணவு அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்