இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா!... தமிழகத்தில் எண்ணிக்கை 234ஆக உயர்ந்தது

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி நடந்த தப்லிக் ஜமாத் என்ற இஸ்லாமிய மத வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 1500 பேர் பங்கேற்றனர், இவர்களில் நேற்று 57 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன்வந்து தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்