மொத்தம் 20 கிராமங்களுக்கு கொரோனா நோயை பரப்பிய ஒருவர்: வெளிவரும் பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஒரே ஒரு கொரோனா நோயாளியால் 20 கிராமங்களில் குடியிருக்கும் சுமார் 40,000 மக்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

70 வயதான அந்த கொரோனா நோயாளி மரணமடைந்ததன் பின்னரே இச்சம்பவம் அதிகாரிகளுக்கு தெரியவரவும், அதன் பின்னர் துரித நடவடிக்கையாக 20 கிராம மக்களை தனிமைப்படுத்துதலில் வைத்துள்ளனர்.

மத போதகரான அந்த 70 வயது நபர் இத்தாலி மற்றும் ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய பின்னர் சுய தனிமைப்படுத்தலில் இருக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை பல மடங்கு இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

மேலும், உலகிலேயே கொரோனா சோதனைகளில் கடும் மெத்தனம் காட்டும் நாடாக இந்தியா உள்ளது.

உலக சுகாதார அமைப்பு பலமுறை கோரிக்கை விடுத்தும், இந்தியா கொரோனா சோதனைகளின் எண்ணிக்கையை இதுவரை அதிகப்படுத்தவில்லை.

இதே மெத்தனப்போக்கு நீடித்தால் 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியா கொரோனாவால் பேரழிவை சந்திக்கும் என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பால்தேவ் சிங் என்ற அந்த 70 வயது நபர் கொரோனாவால் இறக்கும் முன்னர், சீக்கியர்களுக்கான சிறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

ஆறு நாட்கள் நடந்த அந்த விழாவில் நாள்தோறும் 10,000 பேர் வரை கலந்து கொண்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

பல்தேவ் சிங் இறந்த ஒரு வாரத்தில், அவரது குடும்பத்தினர் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை பால்தேவ் சிங்குடன் நேரடி தொடர்பில் இருந்த 550 பேரை அதிகாரிகள் தரப்பு அடையாளம் கண்டுள்ளது.

தொடர்ந்து பால்தேவ் சிங் தங்கியிருந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள 15 கிராமங்களையும் முடக்கியுள்ளனர்.

மேலும் 5 கிராமங்களை முடக்கும் வகையில் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்