கொரோனா அச்சம்: எங்களுக்கு இதை செய்யுங்கள்... இலங்கை தமிழ்பெண்கள் உள்ளிட்டோர் வைத்த கோரிக்கை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இலங்கை முகாமில் உள்ள தமிழர்களிடம் வட்டாட்சியா் குறைகளை கேட்டறிந்தார்.

அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள இலங்கை முகாம், காணிக்குடியிருப்புப் பகுதியில் வட்டாட்சியா் கந்தப்பன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தொடர்பாகவே அவர் விசாரித்தார்.

அப்போது, கொரோனா அச்சம் காரணமாக கிருமிநாசினி மருந்து தெளிக்க வேண்டும், தெருவிளக்குகள் வேண்டும் என இலங்கை தமிழ்ப்பெண்கள் உள்ளிட்ட நபர்கள் கோரிக்கை வைத்தனர்

இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசு சாா்பில் வழங்கப்படும் மாா்ச் மாத நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

கொரோனா நிவாரணத் தொகை, பொருள்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் படும் என வட்டாட்சியா் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்