மது கிடைக்காத விரக்தியில் தூக்க மாத்திரை அதிகம் உட்கொண்ட நடிகை மனோரமாவின் மகன்! தீவிர சிகிச்சை

Report Print Abisha in இந்தியா
2164Shares

மது கிடைக்காத விரக்தியில், நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை அதிகம் உட்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர் மனோரமா. கிட்டத்தட்ட 50 வருடங்களாக காமெடி மற்றும் குணச்சிர வேடங்களில் சினிமா துறையில் தன்னை அடையாளப்படுத்தி கொண்டார். அவர், அக்டோபர் 10, 2015ல் காலமானார்.

அவரது ஒரே மகனான பூபதி, போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மது கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், மதுகள் கிடைக்காத விரக்தியில் பூபதி அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உண்டுள்ளார்.

இதனால், உடல் நலக்கோளாறு ஏற்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தி சினிமா துறையினர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது கிடைக்காததால் அதற்கு அடிமையான சிலர் தற்கொலை செய்துகொள்வதாக தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் மனோரமா மகன் தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்