கொரோனா: இந்தியாவில் 24மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு! இஸ்லாமியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர்...

Report Print Abisha in இந்தியா

கொரோனா தொற்றின் தாக்கம் இந்தியாவில் தற்போது வேகமாக உயர்ந்து வரும் நிலையில், இன்று இஸ்லாமியர்கள் கடைபிடிக்கு மன்னிப்பு இரவிற்கு வெளியில் வரவேண்டாம் என்று மத்திய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதலில், சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது ஐரோப்பிய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஆசிய நாடான இந்தியாவில் தற்போது வேகமாக வைரஸ் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5194ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 773பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றுடைய 35பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு தொடங்கிய பின் ஒரே நாளில் அதிகபட்சம் மரணம் நடந்தது கடந்த 24மணிநேரத்தில் தான்.

தற்போது இந்தியவில், அதிகபட்சமாக மகாராஷ்ராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1018ஆக உள்ளது. தமிழ்நாட்டில் 690பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இரண்டாவது அதிக எண்ணிக்கையில் உள்ளது.

இது மேலும், அதிகரிக்க கூடதென மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இன்று முஸ்லிம்களால் மன்னிப்பின் இரவாக அனுசரிக்கபடும் ஷபே பாராஅத் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக ஊரடங்கு உத்தரவை மீறி இஸ்லாமியர்கள் வெளியே வரவேண்டாம் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுபோல அலிகர் தலைமை உலாமாவும் யாரும் பள்ளிவாசலில் கூட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்