பிடிபட்ட திருடர்களுக்கு கொரோனா! தனிமைபடுத்தப்பட்ட நீதிதுறை

Report Print Abisha in இந்தியா

பஞ்சாப் மாநிலத்தில் பிடிபட்ட திருடர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிதுறையினர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் லுதியானாவை சேர்ந்த சவுரவ் செகல் என்ற இருச்சக்கர வாகன திருடனை பொலிசார் பிடித்துள்ளனர். அவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

பொலிசாரிடம் சிக்கியபின் அவனுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருமல் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவனை மருத்துவமனை சோதனைக்கு பொலிசார் உட்படுத்தியுள்ளனர். அதில், அவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சவுரவை பிடித்த பொலிசார், விசாரணையில் ஈடுபட்ட நீதிபதி, நீதிமன்ற ஊளியர்கள், மேலும், சவுரவ் குடும்பத்தினரை தனிமையில் இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து சவுரவின் நண்பனான நவ்ஜோத் சிங் என்பவனையும், செயின் பறிப்பு வழக்கில் கைது செய்த பொலிசார், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மருத்துவமனையில் அனுமதித்த போது அவன் தப்பி சென்றுள்ளான். எனவே பொலிசார் அவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்