கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை!.. தூரத்தில் இருந்தபடி கதறும் குடும்பத்தினர்

Report Print Fathima Fathima in இந்தியா

உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 95,000ஐத் தாண்டியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் 805 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களிலிருந்து கொரோனா வைரஸ் பரவுமா? எத்தனை நாட்கள் வாழும்? என்பது குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் இல்லாத நிலையில் அடக்கம் செய்யும் முறை பற்றி தெரியவந்துள்ளது.

இறந்தவரின் உடலில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட சாதாரண துணியைக் கொண்டு மூன்று அடுக்குகள் சுற்றுகிறார்கள்.

அடுத்ததாக பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு கிருமி நாசினியை தெளித்து பிரத்யேக வாகனத்தில் ஐந்து உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் கொண்டு செல்கின்றனர்.

இவர்களும் முழுமையாக உடலை மூடிய வண்ணம் பாதுகாப்பு உடைகளை அணிந்திருக்கின்றனர்.

இடுகாட்டுக்கு கொண்டு சென்ற பின்னர் 12 அடி ஆழ குழியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

மண்ணை போட்டு மூடிய பின்னரும் இறுதியாக அந்த இடம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

தொடர்ந்து பணியாளர்கள் அனைவரின் பாதுகாப்பு உடைகள் களையப்பட்டு அந்த இடத்திலேயே எரிக்கப்படுகிறது.

உறவினர்கள் யாரும் பக்கத்தில் அனுமதிக்கப்படவில்லை, தங்கள் அன்புக்குறியவர்களை இறுதியாக பார்க்கும் வாய்ப்பு கூட இல்லாமல் போவது சோகத்தின் உச்சக்கட்டம்.

எனவே வரும்முன் காப்பதை உணர்ந்து அனைவரும் பத்திரமாக வீட்டிலேயே இருக்கும்படி அரசும் அறிவுறுத்தி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்