அவங்கள கைது பண்ணுங்க... சகோதரி மீது புகாருடன் பொலிசாரை நாடிய 8 வயதுச் சிறுவன்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் தன்னை விளையாட்டுக்குச் சேர்க்காத சகோதரி உள்ளிட்ட ஐந்து சிறுமிகளைக் கைது செய்ய வேண்டும் என 8 வயதுச் சிறுவன் பொலிசாரை நாடிய சம்பவம் நடந்துள்ளது.

கோழிக்கோடு சிட்டி கஸபா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய பாலம் பகுதியைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவன் உமர் நிதார்.

புதிய பாலம் அருகில் வேறு ஒரு வழக்கு விசாரணைக்காகச் சென்ற காவல் அதிகாரிகளிடம் சிறுவன் உமர் நிதார் ஒரு புகார் மனு அளித்தான்.

அதில், தாம் அபே இன்டர்நேஷனல் பாடசாலையில் மூன்றாம் வகுப்பு எனவும், குடியிருப்புக்கு அருகில் உள்ள ஐந்து சிறுமிகள் தன்னைத் தொல்லை செய்கிறார்கள்.

எனவே உடனடியாக அவர்களைக் கைது செய்யவேண்டும் என அந்தப் புகாரில் கூறியிருந்தான்.

சிறுவனின் புகார்தானே என அலட்சியம் செய்யாமல் அந்த காவல் அதிகாரிகள் சிறுவனின் குடியிருப்புக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அந்தச் சிறுவன் புகார் அளித்தது தனது சகோதரி உள்ளிட்ட சிறுமிகள் மீது என தெரியவந்தது.

அந்தச் சிறுவனை விளையாட்டுக்குச் சேர்க்காமல் புறக்கணித்ததால் மனமுடைந்து இந்தப் புகாரை அளித்துள்ளதும் தெரியவந்தது.

சிறுமிகளை அழைத்து, சிறுவன் உமர் நிதாரையும் விளையாட்டுக்குச் சேர்த்துக்கொள்ளும்படி பொலிசார் அறிவுரை கூறிச் சென்றுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்