கொரோனா அலை: சீனாவை மிஞ்சுமா இந்தியா? ஓரே நாளில் கிட்டதட்ட 4 ஆயிரம் பேர்...

Report Print Abisha in இந்தியா

இந்தியாவில், 82,052 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 3967பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் மிகப்பெரிய அளவை எட்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 3967 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,920-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை இந்தியாவில் கோவிட-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2649-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், சீனாவை மிஞ்சிவிடுமா என்று கேள்வி எழுந்துள்ளது. சீனாவில் இதுவரை 82,933 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,633 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்