திருமணமாகாத பார்வையற்ற பெண்ணுக்கு ஏற்பட்ட வயிற்றுவலி! கர்ப்பமானது கண்டுபிடிப்பு... விசாரணையில் தெரிந்த உண்மை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பார்வை குறைபாடுள்ள பெண்ணை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளியை பொலிசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம்,லால்குடி அருகே புதூர் உத்தமனூர் ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணி. இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 35 வயதான மூத்த மகள் பார்வையிழந்த்தால் அவரைத் தவிர இருவருக்கும் திருமணமாகியுள்ளது.

இந்நிலையில் இந்த பெண்ணின் வீட்டின் அருகேயுள்ள சிவக்குமார் என்ற வயதான கூலித் தொழிலாளிக்கு திருமணமாகி மனைவி மற்றும் திருமண வயதில் பெண் குழந்தையுள்ளது.

சிவக்குமார் பார்வைக்குறைபாடுள்ள பெண்ணை மிரட்டி பல முறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண்ணிற்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. அவரது உறவினர் பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அப்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

கர்ப்பத்திற்கு காரணம் யாரென அப்பெண்ணிடம் கேட்டதற்கு தன் வீட்டிற்கு அருகிலுள்ள பழனியாண்டி மகன் சிவக்குமார் எனக் கூறினார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சிவக்குமாரிடம் பொலிசார் விசாரணை செய்ததில் நடந்த சம்பவத்தினை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்