பெண் ஊழியரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த அரசு அதிகாரி! சிசிடிவி கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பெண் ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது இன்னும் தீவிரமான நடவடிக்கை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் வேடசந்தூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக கோபிநாத் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இதே அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்து வந்த சுமதி என்பவர் தனக்கு பிறந்தநாள் என்பதால், அதிகாரி என்ற முறையில், கோபிநாத்திற்கு இனிப்பு கொடுக்க வந்துள்ளார்.

அப்போது, கோபிநாத் திடீரென்று சுமதியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட, இது அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...

அதன் பின் அந்த வீடியோ வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் என சமூகவலைத்தளங்களில் வைரலாக, இதைக் கண்ட திண்டுக்கல் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனரான குருராஜன் குறித்த நபர்கள் மற்றும் பிற உழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

இதையடுத்து உடனடியாக, விசாரணையின் அடிப்படையில் வேடசந்தூர் பேரூராட்சியின் செயல் அலுவலரான கோபிநாத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய உதவி இயக்குனர் குருராஜன் அதிரடி உத்தரவிட்டார்.

இப்படி உடனடியாக, அதிரடி நடவடிக்கை எடுத்த உதவி இயக்குனர் குருராஜனை இணையவாசிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பாராட்டி வரும் நிலையில், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்காமல், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சிசிடிவி கமெரா இருக்கிறது என்பதை அறிந்தும், இவ்வளவு தைரியமாக அவர் இந்த சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் என்றால், அவருக்கு இந்த தண்டனை போதாது, துறைரீதியாக மட்டுமே நடவடிக்கை எடுக்காமல், இதுபோன்ற ஆட்களை பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்