கொரோனா அலை... தொடர்ந்து புரட்டி எடுத்த சூப்பர் புயலால் இதுவரை லட்சம் கோடி நஷ்டம்! இந்தியாவின் நிலை

Report Print Abisha in இந்தியா

கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் தற்போது 1 லட்சம் கோடிக்கு மேல் பெருத்த நஷ்டத்தில் உருவாக்கி சென்றுள்ளது ஆம்பன் புயல்

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவுக்கு 112,442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வங்க கடலில் உருவான ஆம்பன் புயல் இந்தியாவின் மேற்கு வங்கம், ஒடிசா, கொல்கத்தா ஆகிய மாநிலங்களை புரட்டி எடுத்துள்ளது. இதை சூப்பர் புயல் என்றும், 20 வருடங்களில் ஏற்பட்ட புயலை விட வலுவனதாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வகம் எச்சரித்திருந்தது.

இதில், இதுவரை 12 பேர் பலியாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், முழு சேத விவரம் இன்னும் கணக்கிடப்படவில்லை.

மேற்கு வங்கத்தில் மட்டும் 1 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தின் டிக்காவுக்கும் வங்கதேசத்தின் ஹதியா தீவுக்கும் இடையே கரையை கடந்தது.

அப்போது காற்று மணிக்கு 133 கி.மீ. வேகத்தில் பலமாக வீசியது. இதனால் அங்கு மரங்களும் மின்கம்பங்களும் வேரோடு சாய்ந்தன. அதிக வேக காற்றால் அங்கு உள்ள டெல்டா பகுதிகள் மற்றும் கொல்கத்தாவின் நகர்ப்புற பகுதிகளிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்