கொரோனா ஊரடங்கு: கள்ளநோட்டு அடித்து மது வாங்கிய கும்பல்! சிக்கியது எப்படி

Report Print Abisha in இந்தியா

கொரோனா ஊரடங்கால், மதுவாங்க காசு இல்லை என்று கள்ளநோட்டு அடித்த கும்பல் சிக்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மூங்கித்தான்பட்டி மது கடையில் கடந்த 16ம் திகதி திருமயத்தை சேர்ந்த முகமது இப்ராஹிம், முகமது நசுருதீன், ராமச்சந்திரன், சந்தோஷ் குமார் ஆகிய நால்வரும் திருமயம் அருகே உள்ள மதுக்கடைக்கு சென்றுள்ளனர்.

மதுக்கடையில் 200 ரூபாய் கள்ள நோட்டுக்கள் ஒன்பது தாள்களைக் கொடுத்து மது பாட்டிலை வாங்கியுள்ளனர்.

அப்போது டாஸ்மாக் கடை விற்பனையாளர் சந்தேகம் அடைந்து டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் தெரிவித்தார்.

இது குறித்து பொலிஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நான்கு பேரையும் திருமயம் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் சேர்ந்த சுரேஷ் என்பவரை போலிசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஊரடங்கு நேரத்தில் வேலையில்லாததால், கையில் பணம் இல்லமல் இருந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் மது கடை திறக்கப்பட்டுள்ளது. எனவே நாகர்கோவிலை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் உதவியுடன் கள்ள நோட்டுகளை அடித்துள்ளனர்.

பின் மணி கண்டன் வீட்டில் சோதனை செய்த பொலிசார், 65 லட்சத்து 43ஆயிரம் ரூபாய் கைப்பற்றியுள்ளனர்.

கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்திய ஒரு கம்ப்யூட்டர், ஒரு மடிக்கணினி, ஒரு பிரிண்டர் ஆகியவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர்.

இதில், கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்