ஊரடங்கு நேரத்தில் வீட்டில் தங்க இடம் கொடுத்த நண்பனின் மனைவியுடன் ஓட்டம் பிடித்த இளைஞன்! முழு பின்னணி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில், கேரள மாநிலம் ஒன்றில் ஊரடங்கு காரணமாக, நண்பனுக்கு வீட்டில் இடம் கொடுத்த நிலையில், அந்த இளைஞன் நண்பனின் மனைவியுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இருப்பினும் சமீபத்தில் ஒரு சில மாநிலங்களில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டது.

நாட்டில் ஆரம்பத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்த கேரளா, இப்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கு, கொரோனாவில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதற்கான சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.

கொரோனா எந்த வேகத்தில் கேரளாவிற்குள் வந்ததோ, அதே வேகத்தில் கேரளா அரசு கொரோனாவை விரட்டியுள்ளது என்றே கூறலாம்.

இந்நிலையில் கேரளாவில் ஊரடங்கு நேரத்தில், அடைக்கலம் கொடுத்த நண்பனின் மனைவியுடன் ஓடிப்போன இளைஞனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், மூணாறு பகுதியைசேர்ந்த ஒருவர் எர்ணாகுளம் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஊரடங்கு காரணமாக தங்குவதற்கு இடமும் இன்றி சாப்பாடும் இன்றி தவித்துள்ளார்.

இதனால், எர்ணாகுளத்தில் தனது பால்ய கால நண்பர் ஒருவர் இருப்பதை கேள்விப்பட்டு அவருடைய உறவினர்களிடம் போன் செய்து நண்பரின் தொலைபேசி எண்ணை வாங்கி உள்ளார்.

அதன்பிறகு நண்பருக்கு போன் செய்து தான் ஊரடங்கு காரணமாக கஷ்டப்பட்டு கொண்டு இருப்பதாகவும் தனக்கு உதவி செய்யும்படியும் கெஞ்சி கேட்க, அவரும் நண்பனின் நிலையை கண்டு வேதனையடைந்து, அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு தங்குவதற்கு இடம் மற்றும் சாப்பாடு என தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அவர் தனது நண்பரை வீட்டில் வைத்து தங்க வைத்துள்ளார்.

சமீபத்தில் மூணாறு பகுதி பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டதால், நண்பர் அந்த இளைஞரிடம் வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். ஆனால் தொடர்ந்து அவர் நண்பரின் வீட்டிலேயே தங்கியிருந்தது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் திடீரென ஒருநாள் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குறித்த இளைஞன் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிசார் அதன் பின் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, அந்த பெண் தனது புதிய காதலருடன் தான் செல்வேன் என்றும், குழந்தைகளும் தன்னுடன் தான் இருப்பார்கள் என்றும் கூறினார். பொலிசார் எவ்வளவோ அறிவுரை கூறியும் அந்த பெண் கேட்காமல் காதலனுடன் சென்று விட்டார்.

மேலும் அந்த பெண் தனது பெயரில் தனது கணவர் வாங்கி கொடுத்த காரையும் தன்னுடைய நகைகளையும் எடுத்துக்கொண்டு காதலருடன் குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

ஊரடங்கு நேரத்தில் நண்பருக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்யப் போக, தற்போது அந்த நண்பர் மனைவி குழந்தைகளை இழந்து நிற்கும் சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்