கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடற்கூறாய்வு செய்யலாமா?

Report Print Abisha in இந்தியா

கொரோனா வைரஸ் தொற்றால் உரிழந்தவர்களின் உடலை பிரதேபரிசோதனை செய்வது பாதுகாப்பானது அல்ல என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

ஐ.சி.எம்.ஆர்-ன் முழு விளக்கத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை, கையாளுவதற்கு, பிரத்யேக மருத்துவ ஊழியர்களை, மருத்துவமனைகள் நியமிக்க வேண்டும். அந்த உடலை, வேறு இடத்திற்கு எடுத்து செல்ல, தனியாக ஊழியர்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர் விபத்து அல்லது தற்கொலை செய்து கொண்டாலோ பொலிஸின் ஒத்துழைப்புடன் அவரது உடலை அறுக்காமல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

உடற்கூறாய்வு செய்வதன் மூலம் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகம். அந்த உடலை முழுவதுமாக கிருமி நாசினியால் சுத்தம் செய்த பின் உடற்கூறாய்வு செய்வதும், பாதுகாப்பானது அல்ல.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலில் வைரஸ் உயிர்வாழும் நேரம் படிபடியாக குறையும் என்ற அறிவியல் கூற்றினால், அந்த உடலில் முழுமையாக வைரஸ் தொற்று நீங்கிவிட்டது என்று பொருளில்லை என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்