காயமடைந்த தந்தையை 1,200 கி.மீ சைக்கிளில் வைத்து பயணித்த சிறுமி! கிடத்தது மிகப்பெரிய வாய்ப்பு

Report Print Abisha in இந்தியா

காயப்பட்ட தந்தையை சைக்கிளை மித்து 1,200 கிலோ மீற்றர் கடந்து வீடு வந்து சேர்த்த சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தின கூலி தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட தொழிலாளி மோகன் பஸ்வானை அவரது மகள் ஜோதி சைக்கிளில் வைத்து ஓட்டி வீட்டில் வந்து சேர வைத்துள்ளார்.

ஜோதியின் தந்தை மோகன் பஸ்வான் குருகிராமில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். லாக் டவுன் அமல்படுத்தப்பட்ட அதேநேரத்தில் மோகனுக்குக் காயமும் ஏற்பட்டிருக்கிறது.

இதனால், அன்றாட உணவுக்கே வழியில்லாத நிலை. கடும் வறுமையில் வாடிய நிலையில், தந்தையைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்திருக்கிறார் 8ம் வகுப்புப் பயின்று வரும் சிறுமி ஜோதி குமாரி.

சைக்கிளில் பயணிக்கும் சிறுமி ஜோதி ( Twitter/(@AnubhaPrasad) )

இதையடுத்து தங்களிடம் இருந்த சொற்பக் காசை வைத்து அப்பகுதியில் ஒரு சைக்கிளை வாங்கியிருக்கிறார்கள். குருகிராமிலிருந்து சுமார் 1,200 கி.மீ தூரத்தில் பீகாரில் இருக்கும் தங்கள் கிராமத்துக்குத் தந்தையும் மகளுமாகக் கடந்த 10ம் திகதி பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

காயமடைந்த தனது தந்தையை சைக்கிளின் பின்னால் இருக்கையில் அமரவைத்து ஒரு பையுடன் 7 நாள்கள் தொடர்ச்சியாகப் பயணித்துக் கடந்த 16ம் திகதி பீகாரில் இருக்கும் சொந்த கிராமத்தை அடைந்தனர். வழியில் கிடைத்த இடத்தில் ஓய்வு, உணவு என இடைவிடாமல் பயணித்து தந்தையைப் பத்திரமாக ஊர் சேர்த்திருக்கிறார் அந்த இரும்பு மனுஷி.

இந்த விவகாரம் ஊடங்கங்கள் மூலம் பலருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இந்திய சைக்கிளிங் ஃபெடரேஷன் அவருக்கு உரிய முறையில் பயிற்சி வழங்க முன்வந்துள்ளது.

சிறுமி ஜோதி குமாரி BBC Hindi

இதுகுறித்து பேசிய ஆன்கன் சிங், ``லாக் டவுன் முடிந்தவுடன் அவரை டெல்லிக்கு வரவழைத்து சில பரிசோதனைகளை வைக்க இருக்கிறோம். அதில், அவர் தேறும்பட்சத்தில் டெல்லியில் வைத்து அவருக்குப் பயிற்சிகள் கொடுக்க இருக்கிறோம். இன்று காலை அவரிடம் தொலைபேசி வாயிலாகப் பேசினோம். அவரும் ஆர்வமாக இருக்கிறார்.

1,200 கி.மீ சைக்கிள் மிதிப்பது சாதாரணமான விஷயமல்ல. அந்தச் சிறுமியிடம் திறமை இருக்கிறது. உரிய முறையில் பயிற்சி கொடுத்தால் நிச்சயம் பெரிய அளவில் வருவார். 14 - 15 வரையிலான வயதில் சைக்கிளிங் செய்யும் வீரர், வீராங்கனைகள் நம்மிடம் 10 பேர்தான் இருப்பார்கள்’’ என்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்