தமிழகத்தில் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக இலங்கை முகாமை சேர்ந்த தமிழ் இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி வாழவந்தான் கோட்டையில் உள்ள இலங்கை முகாமில் வசிப்பவர் கிஷாந்த் (19).
இவர், ஓராண்டுக்கு முன், திருச்சி கே.கே.நகரில் உள்ள, டியூஷன் சென்டரில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு படித்து வந்தார்.
அப்போது, அங்கு பயின்ற, பிளஸ் 1 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. மாணவியுடன் சேர்ந்து போட்டோ எடுத்த கிஷாந்த், அவரை காதலிப்பதாக கூறி, அவரது போட்டோக்களை, 'வாட்ஸ் ஆப்'பில் வாங்கி வைத்துள்ளார்.
இந்நிலையில் அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி, மாணவியை, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து மாணவி, தன் பெற்றோர் மூலம் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் பொலிசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து பொலிசார் கிஷாந்தை கைது செய்துள்ளனர்.