வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் திமுக-வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் கைது! ஸ்டாலின் கடும் கண்டனம்

Report Print Basu in இந்தியா

திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி 14ம் திகதி, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, தலித் சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என பேசினார்.

அவரின் இந்த பேச்சு தலித் சமுதாயத்தினரை அவமதிக்கும் விதமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இதையடுத்து, ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி பேச்சு தலித் சமுதாயத்தினரை அவமதிக்கும் விதமாக இருப்பதாக கூறி அவரை கைது செய்ய வேண்டும் என, ஆதிதிராவிடர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாண் குமார் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், மே 23 அதிகாலை, சென்னையில் உள்ள ஆர்.எஸ்.பாரதியின் இல்லத்தில் பொலிசார் அவரை கைது செய்தனர்.

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்யதாக பொலிசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது திமுகவினரிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜூன் 1ம் திகதி வரை ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்