ஊரடங்கு காலம்... தள்ளி போன திருமணம்! பொறுமை இழந்த மணப்பெண் எடுத்த முடிவு..

Report Print Abisha in இந்தியா

ஊரடங்காலத்தில் திருமணம் தள்ளி போனதை அடுத்து, மணப்பெண் மணமகன் வீட்டிற்கு 80 கிலோ மீற்றர் நடந்தே சென்றுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆனால், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த இன்னும் பெருமளவில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

இதனால், உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர் பகுதியை சேர்ந்த மணமகள் கோல்டிக்கும், கன்னாஜ் பகுதியை சேர்ந்த விரேந்திர குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மே 4ஆம் திகதி திருமணம் நடத்துவதாக இருந்தது.

ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இவர்கள் திருமணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்காக காத்திருந்து பொறுமை இழந்த மணமகள், மணமகனின் வீட்டைத் தேடி நடைபயணத்தை தொடங்கியுள்ளார். கிட்டத்தட்ட 80 கிலோ மீற்றர் பயணம் செய்த மணமகள், விரேந்திர குமாரின் வீட்டை அடைந்துள்ளார். திடீரென வீட்டு வாசலில் மணமகள் நிற்பதை பார்த்த மணமகனின் வீட்டார் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக மணமகள் வீட்டுக்கும் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள், பெண்ணிடம் சிறிது காலம் காத்திருக்கும் படி கேட்டுக்கொண்டனர். ஆனால் மணப்பெண் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், திருமணத்திற்கு நாளை தினத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்