கழுத்தில் தாலி ஏறியவுடன் மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! கவலையில் ஆழ்ந்த கணவன் மற்றும் குடும்பத்தார்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கழுத்தில் தாலி ஏறியதும் மணப்பெண் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த 26 வயது பெண் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் கெங்கவல்லியைச் சேர்ந்த 28 வயதான உறவினருக்கும் இன்று திருமணம் செய்ய கடந்த ஜனவரி மாதம் உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த 21ம் திகதி சென்னையில் இருந்து மணப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் சேலம் மாவட்டத்திற்கு வந்தனர்.

அப்போது தலைவாசல் நத்தக்கரை சோதனைச் சாவடி மையத்தில் பரிசோதனை செய்தனர். அதில் மணப்பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று மணப்பெண்ணுக்கு மீண்டும் பரிசோதனை செய்தனர். அவருடன் வந்த 12 பேரில் 9 பேருக்கும் சோதனை செய்யப்பட்டது. மேலும் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கி வீடு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.

மணப்பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் திருமணம் முடிந்ததும் அந்த பகுதியில் நோய் தடுப்பு பணி முழுமையாக மேற்கொள்ளவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில் சமூக இடைவெளியில் 5 பேருடன் திருமணம் நடத்திக் கொள்ளவும், அனைவரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி இன்றுகாலை திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் அவர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டார்.

பல்வேறு கனவுகளுடன் புதுமண தம்பதி திருமண வாழ்க்கையை தொடங்க வேண்டிய நேரத்தில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது மணமகன் உள்பட உறவினர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்