பாம்பை கடிக்கவிட்டு மனைவியை கொன்ற விவகாரம் முதலில் நண்பனிடம் தெரிவித்த கணவன்: இறுகும் விசாரணை

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தை உலுக்கிய உத்ரா கொலை வழக்கு தொடர்பில் விசாரணை வட்டத்தில் மேலும் பலர் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மனைவி உத்ராவை கொலை செய்த விவகாரத்தை சூரஜ் தமது நண்பனிடம் பகிர்ந்து கொண்டதாக வாக்குமூலத்தில் குறிப்பிட்ட நிலையில்,

தற்போது அந்த நண்பரையும் பொலிசார் விசாரணை வட்டத்தில் உட்படுத்தியுள்ளனர். மட்டுமின்றி, குறித்த தகவலை அவர் பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், கைதாவது உறுதியான நிலையில் சூரஜ் வழக்கறிஞர் ஒருவரை நாடியதாகவும் அந்த நண்பர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இத்தனை அச்சப்பட என்ன காரணம் என சூரஜிடம் நண்பர் விசாரித்த பின்னரே, பணம் செலவிட்டு கொடிய விஷ நாகங்களை வாங்கியதும், மனைவியை கொன்றதும் அவர் நண்பரிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சூரஜின் இரு நண்பர்கள், தூக்க மாத்திரை வழங்கிய மருந்தக உரிமையாளர் உள்ளிட்ட சிலரை பொலிசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

இதனிடையே, பாம்பு கடித்த அன்று உத்ரா தூக்க மருந்து கலந்த பழச்சாறு அருந்தியதாக கூறப்பட்ட விவகாரத்தில் மேலதிக பரிசோதனைகளுக்கு விசாரணை அதிகாரிகள் நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் எதிர்வரும் நாட்களில் விசாரணையை தீவிரப்படுத்தவும், அதன் பின்னரே இறுதி முடிவை எடுக்க இருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்