தனியாக கிடந்த தலை! படுகொலை செய்யப்பட்ட தமிழக மாணவன் தொடர்பில் வெளிவந்துள்ள திடுக்கிடும் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தலையை வெட்டி கொல்லப்பட்ட கல்லூரி மாணவரின் சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவன்வடலி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சத்தியமூர்த்தி தலைதுண்டித்து கொல்லப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் துண்டிக்கப்பட்ட மாணவர் சத்திய மூர்த்தியின் தலையை தேடிய காவல்துறையினர், சனிக்கிழமை காலையில் தான் அதனை கண்டு பிடித்தனர்

கடந்த பொங்கல் தினத்தன்று ஊருக்குள் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக சாதி ரீதியாக சத்தியமூர்த்தியை எதிர் தரப்பினர் கொலை செய்துள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதே நேரத்தில் இந்த கொலையின் பின்னணியில், தென் மாவட்டத்தில் பதுங்கி இருந்து தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி வரும் கொடூர கூலிப்படை கும்பல் ஒன்றின் தொடர்பு இருப்பதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் கூலிப்படைகும்பல் எது ? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆத்தூர் காவல் நிலைய பகுதியில் சில தினங்களுக்கு முன்பு ஆடு களவாடிய தகராறில் 12 பேர் கொண்ட கூலிப்படையினரால் 5 பேர் கத்தியால் குத்தப்பட்டனர். அதில் ஒருவர் பரிதாபமாக பலியானார். கஞ்சாவுக்குவும், மதுவுக்கும் அடிமையாகி கூலிப்படையாக சென்று கொலை செய்யும் நிலை தொடர்வதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்