வெளிநாட்டில் இருந்த கணவனின் போன் காலுக்காக காத்திருந்த மனைவிக்கு வந்த அதிர்ச்சி செய்தி!

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தை சேர்ந்த கணிக்குமார் என்பவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில், அவர் கடந்த ஒரு மாதமாக குடும்பத்தினரிடம் போனில் பேசாமல் இருந்த நிலையில், இறுதியாக குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சி தரும் செய்தி வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆண்டிகுளப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கணிக்குமார். 44 வயதான இவர் சவுதி அரேபியா நாட்டில் கடந்த 13 வருடங்களாக கிரேன் ஆப்ரேட்டராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தினரிடம் அடிக்கடி போனில் பேசி வந்த கணிக்குமார் கடந்த ஒரு மாதமாகவே பேசாத காரணத்தினால், குடும்பத்தினர் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துள்ளனர்.

இந்நிலையில் தான், சவுதி அரேபியாவில் கடந்த மாதம் கணிக்குமாருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கணிக்குமாரின் மனைவிக்கு சவுதி அரேபியாவிலிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது.

இதனால், மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் கடும் சோகத்தில் இருந்தனர். இதற்கிடையே, சவுதி அரேபியாவில் இருந்து திடீரென கணிக்குமாரின் மனைவிக்கு மீண்டும் ஒரு அழைப்பு வந்துள்ளது.

அதில்,கொரோனா நோய்த்தொற்றால் உங்கள் கணவன் இறந்துவிட்டார் என்ற தகவல்களைக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டனர்.

இதைக் கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சிய அடைந்தனர். தற்போது விமான சேவை இல்லாத காரணத்தினாலும், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதாலும், அவரது உடலை இந்தியா கொண்டு வர முடியாத நிலை உள்ளது.

இதனால் இறந்தவரின் உடல் சவுதி அரேபியாவிலேயே, அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் உறவினர்கள் கணிக்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்