எல்லைகள் மூடல்! டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in இந்தியா

கொரோனா பரவரை தடுக்க இந்தியாவின் தலைநகரமான டெல்லி அடுத்த வாரம் அதன் எல்லைகளை மூடும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இருப்பினும், புதிய கட்டுப்பாடு நகரின் எல்லைகளில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் இயக்கத்தை நிறுத்தாது என்று கெஜ்ரிவால் கூறினார்.

நகரம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் ஒவ்வொரு நாளும் திறக்க அனுமதிக்கப்படும், ஆனால் இந்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களின்படி இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

அனைத்து தொழில்களும் செயல்பட அனுமதிக்கப்படும். முடிதிருத்தும் கடை செயல்பட அனுமதிக்கப்படும், ஆனால் ஸ்பாக்கள் இன்னும் திறக்கப்படாது என்றும் கெஜ்ரிவால் கூறினார்.

பொது மற்றும் தனியார் போக்குவரத்து மற்றும் கார் அல்லது ஆட்டோரிக்ஷாவில் பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை மீதான கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் நீக்கியுள்ளது.

புதுடெல்லியை ஒட்டியுள்ள மாநிலங்கள் தங்கள் எல்லைகளைத் தாண்டி குறைந்தபட்ச இயக்கத்தை மட்டுமே அனுமதிக்கும், ஆனால் அரசாங்க அதிகாரிகள் முறையான அடையாளத்தை வைத்திருந்தால் மட்டுமே பயணிக்க முடியும் என அறிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்