காதலியின் அம்மாவிற்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியது ஏன்? விசாரணையில் இளைஞன் சொன்ன காரணம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் வாலிபர் ஒருவர் காதலியின் அம்மாவிற்கு, அவள் மகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ஏன் அனுப்பினேன் என்று பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே இருக்கும் ஒசரவினை பகுதியை சேர்ந்தவர் சகிதா(45). கணவர் இறந்துவிட்ட நிலையில் இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இதில், மூத்த மகள் ஷர்மிளா(26) குவைத் நாட்டில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

ஷர்மிளா குவைத் செல்வதற்கு முன்பு மர்பின் தனேஷ் என்பவரை காதலித்துள்ளார். இதனால் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்றுள்ளனர். பேஸ்புக் மூலம் இவர்களின் காதல் ஆரம்பமாகியுள்ளது.

இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்த போது தான், கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஷர்மிளா குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து, ஷர்மிளாவிடம் அடிக்கடி பணம் கேட்டு மர்பின் தனேஷ் மிரட்டி வந்துள்ளார். அப்படி பணம் தராவிட்டால், தனிமையில்போது எடுத்து கொண்ட ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

இது ஷர்மிளாவின் தயார் சகிதா அச்சுவுக்கு தெரியவர, அவர் உடனடியாக காவல்நிலையத்தில் இளைஞன் மீது புகார் கொடுத்துள்ளார்.

அதன் பின் பொலிசார் மர்பின் தனேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், நானும் ஷர்மிளாவும் நெருங்கி பழகினோம். எங்கள் விவகாரம் ஷர்மிளா அம்மாவுக்கும் தெரியும். அவள் வெளிநாடு செல்வதற்கு பண உதவி செய்தேன்.

இப்போது ஷர்மிளா வேறு ஒருவரை காதலிப்பதாக சொல்கிறார்கள். அவருக்குதான் அவளை கல்யாணம் செய்ய வைக்க போவதாகவும் கேள்விப்பட்டேன்.

அதனால்தான் என்னுடன் பழகிய நாட்களில் நாங்கள் எடுத்து கொண்ட வீடியோ, புகைப்படங்களை மார்ப்பிங் செய்து ஷர்மிளாவின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைத்தேன். என்னை ஏமாற்ற நினைக்காதே என்றும் சொன்னேன்.

அதை ஷர்மிளா காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அதனால்தான் அந்த புகைப்படங்களை அவள் அம்மாவுக்கு அனுப்பினேன். இப்போது என் மீது புகார் அளித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில், முழு விசாரணைக்கு பின்னரே உண்மை வெளியில் தெரியவரும் என்பதால் பொலிசார் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்