யானையின் வயிற்றில் நான் கண்ட காட்சி: பேரதிர்ச்சியில் உறைந்த பிரேத பரிசோதனை மருத்துவர்

Report Print Fathima Fathima in இந்தியா

மூச்சுத்திணறல் ஏற்பட்டு கர்ப்பிணி யானை மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கேரளாவின் மலப்புரத்தில் பசியுடன் வந்த யானைக்கு, அன்னாசி பழத்திற்குள் வெடிமருந்து வைத்து கொடுத்துள்ளனர் மனிதர்கள்.

இதை சாப்பிட்ட போது வெடிமருந்து வெடித்ததில் வலியால் துடித்த யானை ஊருக்குள் உதவிக்காக அலைந்து திரிந்துள்ளது.

அப்போது கூட யாரையும் துன்புறுத்தாமல், எந்த பொருளையும் சேதப்படுத்தாமல் வலி தாங்க முடியாத நிலையில் ஆற்றுக்குள் இறங்கியுள்ளது.

அங்கே யானை பரிதவித்து நின்றதை அறிந்த வனத்துறையினர் இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் மீட்டனர்.

இருப்பினும் அறுவை சிகிச்சைக்கு தயாராகும் முன்னே யானை உயிரிழந்தது.

இச்சம்பவம் கேரளாவையே அதிரவைத்துள்ள நிலையில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவரான டேவிட் ஆப்ரஹாம் Times Now க்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், நான் இதுவரை 250 யானைகளுக்கு மேல் பிரேத பரிசோதனை செய்துள்ளேன், இதையும் ஒன்றாக கருதி என்னால் கடந்து செல்ல முடியவில்லை.

அத்தருணத்தில் நான் மிகவும் உணர்ச்சிவச பட்டவனாக இருந்தேன், கருப்பையில் சிறிய இதயமும், அமிலமும் இருந்ததை பார்த்தே கருவுற்றிருப்பதை அறிந்து கொண்டேன்.

கருப்பையிலிருந்த சிசுவையும் கையில் ஏந்தினேன், வாய் மற்றும் தொண்டையில் உட்பட வெடிமருந்து வெடித்ததில் நுரையீரலும் கடுமையாக பாதிப்படைந்திருந்தது, இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்