நாட்டையே கண்கலங்க வைத்த சம்பவம்! யானையின் வயிற்றில் இருந்த குட்டி சிசுவின் புகைப்படம் வெளியானது

Report Print Santhan in இந்தியா

கேரளாவில் பசியுடன் வந்த கர்ப்பிணி யானை ஒன்றிற்கு அன்னாசி பழத்திற்குள் வெடிமருந்து வைத்து கொடுத்து இறந்த சம்பவத்தில், கருப்பையில் இருந்த சிசுவின் புகைப்படம் வெளியாகி பார்ப்போர் கண்களை கலங்க வைக்கிறது.

கேரளாவின் மலப்புரத்தில் பசியுடன் வந்த யானைக்கு, அன்னாசி பழத்திற்குள் வெடிமருந்து வைத்து கொடுத்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 14 முதல்15 வயது கொண்ட அந்த யானை உயிருக்கு போராடிய கடைசி மூன்று நாட்களிலும் அங்கிருக்கும் வெள்ளையாறு நதிக்கு உள்ளே இருந்துள்ளது.

குறிப்பாக, வாய் மற்றும் தும்பிக்கை பகுதிகள் நீருக்குள்ளேயெ இருந்துள்ளது, வலி தெரியாமல் இருக்க அதிகளவு தண்ணீரை குடித்திருந்ததாக கூறப்பட்டது.

யானையின் நடவடிக்கைகளைக் கண்டு, வனத்துறையினர், இரண்டு கும்கி யானைகளை வைத்து, யானை வெளியேற்றி காப்பாற்ற முயற்சித்த போது, பரிதாபமாக இறந்தது.

யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், கருப்பையில் சிறிய இதயமும், அமிலமும் இருந்ததை பார்த்தே, யானை கருவுற்றிருப்பதை அறிந்து கொண்டேன்.

கருப்பையிலிருந்த சிசுவையும் கையில் ஏந்தினேன், வாய் மற்றும் தொண்டையில் உட்பட வெடிமருந்து வெடித்ததில் நுரையீரலும் கடுமையாக பாதிப்படைந்திருந்தது, இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதால், கேரளா மாநில முதல்வர் பினராய் விஜயன், இதற்கு காரணமான நபர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள், அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில், உயிரிழந்த யானையின் வயிற்றில் இருந்த குட்டி சிசுவை மருத்துவர் ஒருவர் கையில் வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இணையவாசிகள் பலரும் நாம் மனிதராக இருப்பதில் வெட்கப்பட வேண்டும் என்று #WeAreTheVirus #WildAnimals #SaveAnimals #CrueltyFree #SaveElephants போன்ற பல ஹேஷ்டக்குகளை டிரண்டாக்கி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்