வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியதும் காணாமல் போன கணவன்! 7 மாதத்துக்கு பின்னர் தெரிந்த மனைவியின் கோர முகம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் 7 மாதத்துக்கு முன்னர் நபர் ஒருவர் காணாமல் போன நிலையில் மனைவியே அவரை கொலை செய்து சடலத்தை ஆற்றில் தூக்கி எறிந்தது தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குர்ஜித் சிங். இவர் மனைவி மன்பிரீத்.

குர்ஜித் சில ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சொந்த ஊருக்கு திரும்பினார்.

பின்னர் அக்டோபர் மாதம் 31ஆம் திகதி குர்ஜித் மாயமானார்.

இது குறித்து மன்பிரீத்திடம் குர்ஜித்தின் சகோதரர் கேட்ட போது, கடன் கொடுத்த ஒருவரிடம் பணத்தை திருப்பி வாங்க பக்கத்துக்கு ஊருக்கு கணவர் சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் மாதக்கணக்கில் குர்ஜித் வராத நிலையில் மன்பிரீத் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதோடு இளைஞர் ஒருவர் அடிக்கடி மன்பிரீத் வீட்டுக்கு வருவதை அவர் அண்ணி பார்த்துள்ளார்.

இதையடுத்து கடந்த வாரம் பொலிசில் குர்ஜித் மாயமானது தொடர்பில் சந்தேகம் இருப்பதாக அவர் சகோதரர் பொலிசில் புகார் அளித்தார்.

புகாரையடுத்து மன்பிரீத்திடம் பொலிசார் விசாரித்த போது அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது குர்ஜித் வெளிநாட்டுக்கு சென்ற போது ஹர்மன் என்பவருடன் மன்பிரீத்துக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஊர் திரும்பிய குர்ஜித் இது குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த நிலையில் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.

இதை தொடர்ந்து மன்பிரீத்தும், ஹர்மனும் சேர்ந்து குர்ஜித்தை கொலை செய்து ஆற்றில் தூக்கில் வீசியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்