மனைவியை ஏமாற்றி நண்பர்களுக்கு விருந்து வைத்த கணவன்: நடுங்க வைத்த சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் 25 வயது பெண்ணிற்கு அவரது கணவரே வலுக்கட்டாயமாக மதுக் கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 25 வயது பெண்ணிற்கு அவரது கணவரே வலுக்கட்டாயமாக மதுக் கொடுத்துள்ளார். பிறகு தனது 5 வயதுக் குழந்தை முன்பே, நான்கு நண்பர்களுடன் சேர்ந்து தனது மனைவியையே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தையையும் அந்த மனிதாபிமானமற்ற கும்பல் அடித்துத் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் அளித்த தகவலின்படி, என்னையும் என் இரு குழந்தைகளையும் என் கணவர் புதுக்குறிச்சி கடற்கரை அருகேயுள்ள ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு எனக்கு வலுக்கட்டாயமாக மதுவைக் கொடுத்தனர். பிறகு என்னை என் மூத்த மகன் முன்பே அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேசிய பாதிக்கப்பட்ட பெண், தன்னை கணவர் சிகரெட் நெருப்பால் சுட்டுக் காயப்படுத்தி சித்திரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமது கணவர், அவரது நண்பர்களிடம் இருந்து பணம் வாங்கியே இந்த கொடூரத்தை நடத்தினார் எனவும் குறித்த பெண்மணி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்து தப்பி வந்து சாலையில் உதவிக்காக நின்ற அந்தப்பெண்ணை வாகனத்தில் சென்ற ஒரு இளைஞர் மீட்டு வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.

மேலும் இது குறித்து காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் கணவருடன் குறிப்பிட்ட கும்பலையும் பொலிசார் கைது செய்துள்ளான்ர்.

இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்