திருமணமான 10 நாளில் மாயமான புதுப்பெண்! வீட்டின் பின்புறம் உள்ள அறையில் குடும்பத்தார் கண்ட அதிர்ச்சி காட்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் நர்சரி கிராமத்தை சேர்ந்தவர் திராஜ். இவரும் சுவாதி என்ற இளம்பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் 10 நாட்களுக்கு முன்னர் குடும்பத்தார் சம்மதத்துடன் இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.

இந்நிலையில் சுவாதி நேற்று முன் தினம் இரவு தூங்க சென்ற நிலையில் காலையில் வீட்டு படுக்கையறையில் இல்லாமல் மாயமாகியுள்ளார்.

இதையடுத்து கணவர் மற்றும் குடும்பத்தார் அவரை தேடிய போது வீட்டின் பின்புறம் அவர்களுக்கு சொந்தமான சிறிய வீடு உள்ளது, அதன் அறையை திறந்து பார்த்த போது சுவாதி அங்கு தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதனிடையில் சுவாதியின் குடும்பத்தார் கூறுகையில், நாங்கள் ஏழ்மையானவர்கள்.

இதை காரணம் காட்டி திருமணமான நாள் முதலே சுவாதியை அவர் கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர், அதனால் இது கொலையாக கூட இருக்கலாம் என பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

சுவாதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவில் அவர் மரணத்தில் இருக்கும் மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்