வெளிநாட்டில் வசிக்கும் கணவன்! மாமியாருடன் வசித்த 32 வயது மனைவி தனது மகளுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தாயும், மகளும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம் பாடியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மனைவி பிரியா (எ) மரியா பிரின்ஸ் (32).

இவர்களுக்கு, தருண் (13), தனுஷ்கா (6) ஆகிய குழந்தைகள் இருந்தன. மணிகண்டன் வெளிநாட்டில் வேலைபார்த்து வருவதால், அவரது தாய் செல்லத்துடன் பிரியா தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 3 நாள்களாக பிரியா தனது பெண் குழந்தை தனுஷ்காவுடன் காணவில்லையாம். இதையடுத்து, அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.

இந்த நிலையில், பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஒரு பெண்ணும், குழந்தையும் இறந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த அரும்பாவூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றில் கிடந்த உடல்களை மீட்டு மேற்கொண்ட விசாரணையில் காணாமல் போனதாகத் தேடிவந்த பிரியாவும், அவரது குழந்தை தனுஷ்கா என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்