ஒரு மாதமாக காணாமல் போன கணவன்! விசாரணையில் தெரிந்த இளம் மனைவியின் கோர முகம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் ஒரு மாதமாக காணாமல் போன நபர் ஆற்றுக்கு அருகில் சடலமாக கிடந்த நிலையில் அவரை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கை சேர்ந்தவர் பினோத் மண்டல். இவருக்கும் நமீதா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது.

இது இருவீட்டார் சம்மதத்துடன் நடந்த திருமணம் ஆகும். இந்த நிலையில் கடந்த மே மாதம் 26-ம் திகதி முதல் பினோத் மாயமானார்.

இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் பினோத்தை தேடி வந்த போது அங்குள்ள மகாநதி ஆற்றுக்கு அருகில் அவரின் சடலம் துண்டு துண்டாக இருந்த நிலையில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பினோத் மரணத்தை கொலை வழக்காக மாற்றிய பொலிசார் பலரிடமும் விசாரித்து வந்தனர். அப்போது பினோத் மனைவி நமீதாவின் நடவடிக்கையில் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் தங்கள் பாணியில் பொலிசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தினார்கள்.

அதில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததாக நமீதா ஒப்பு கொண்டார்.

இதையடுத்து நமீதாவை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்