மனைவியை மிரட்டி நண்பனுக்கு விருந்தாக்கிய கணவன்!... 9 ஆண்டுகளாக தொடர்ந்த கொடூரம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் நண்பனின் மனைவியை 9 ஆண்டுகளாக துன்புறுத்தி வந்த நபரை பொலிசார் கைது செய்தனர்.

திருச்சி, கே.கே.நகர், அன்பில் தர்மலிங்கம் நகரை சேர்ந்தவர் 41 வயதான தினேஷ் என்ற முகமது அஸ்லாம்.

இவருக்கும் முகமது பாரூக் என்பவருக்கும் கல்லூரி காலத்திலிருந்தே நட்பு இருந்து வந்தது.

கடந்த 2005ம் ஆண்டு தினேஷ் முஸ்லிம் பெண் ஒருவரை காதலித்ததால் மதம் மாறினார், தன்னுடைய பெயரை முகமது அஸ்லாம் என மாற்றியும் கொண்டார்.

இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்தது, இந்நிலையில் 2008ம் ஆண்டு புனித நீர் எனக்கூறி அஸ்லாமின் மனைவிக்கு கொடுத்துள்ளார் பாரூக்.

அதை குடித்தவுடன் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழ, வன்கொடுமை செய்ததுடன் அதை புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்து அஸ்லாமின் தங்கை எரமிடமும், பாரூக்கின் மனைவி பாத்திமாவிடமும் கூறிக் கதறி அழுதுள்ளார்.

இதுகுறித்து 2008ம் ஆண்டு பொலிசில் புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை, இந்நிலையில் 9 ஆண்டுகளாகவே போட்டோவை காட்டி அஸ்லாமின் மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.

மேலும் இதுபற்றிய பிரச்னை வெடிக்காமல் இருக்க, பாரூக் தனது நண்பரான அஸ்லாமை மதுபோதையில் ஆழ்த்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அஸ்லாமின் மகளுடனும் தவறாக நடக்க முயன்றதால் ஆத்திரமடைந்த அஸ்லாமின் மனைவி பாரூக் மீது பொலிசில் புகாரளித்தார்.

இதனைதொடர்ந்து வழக்குபதிவு செய்த பொலிசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்